பரமத்தி வட்டார
விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் பெற அழைப்பு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுப்புற சுழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர் சாகுபடியுடன் மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு விவசாயி நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் செம்மரம், மகாகனி, ரோஸ்வுட், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, புளியன், வேம்பு, வாகை உள்ளிட்ட 25 வகையான மரக்கன்றுகள் வனத்துறை நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதற்கான மரக்கன்றுகள் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது விநியோகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகளை வரப்பு ஒரங்களிலும், வயல் முழுவதும் நடவு செய்யலாம். மரக்கன்றுகள் தேலைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்வார். பின்னர் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல் விரிவாக்க மைய நாற்றங்காலில் இருந்து பெற்று நடவு செய்து கொள்ளலாம். முன்னுரிமை அடிப்படையில் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படவுள்ளதால் மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது பரமத்தி வேளாண்மை விரிவாகக்க மையத்தினை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் வேளாண்மை உதவி இயக்குநர்,

பரமத்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *