இராசிபுரம் செய்தி…

கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு அமைச்சர் பங்கேற்பு..

இராசிபுரம் டிசம்பர் 03..

தமிழகத்தில் மகளிர் நலனுக்கான, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது : நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் நடைபெற்ற, போஷன் அபியான், ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் சமுதாய வளைகாப்பு விழாவில், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் பேச்சினார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள், மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின்கீழ், ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவு உட்கொள்வதன் அவசியம் குறித்து அறிந்துகொள்ள, இயற்கை முறையில் விளைந்த கீரைகள், காய்கறிகள், ஊட்டச்சத்து உணவுகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும் குழந்தைகளின் படிப்படியான வளர்ச்சி முறை குறித்து விளக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியருடன் இணைந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வளைகாப்பு சீர் தட்டுகளை வழங்கி, வளைகாப்பு செய்து வைத்தார். இவ்விழாவில், 65 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி சிறப்பிக்கப்பட்டனர்.

முன்னதாக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியரின் அமைச்சர்

இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரின் உடல் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கான கல்வி, சுகாதாரம், ஊட்டச் சத்து போன்றவை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தாய்மை என்பது பெண்களுக்கு கிடைத்த வரம் ஆகும். எனவே, கர்ப்பிணிப் பெண்களை சிறப்பிக்கும் வகையில் வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ந. பரிமளாதேவி, வெண்ணந்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர். ஜெயந்தி, சபிதா,
வருவாய் அலுவலர் ந. கதிரேசன், வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் P.R. சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. இராமசுவாமி, ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.ஆர். துரைசாமி, ராசிபுரம் சட்டமன்ற அலுவலகப் பொறுப்பாளர் ஏ .கே. பாலச்சந்தர், பேரூர் கழக செயலாளர் ராஜேஷ், மற்றும்
கர்ப்பிணி பெண்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *