கொல்லிமலை;ஆக,7-

கொல்லிமலையில் நிதி சார் கல்வி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம வங்கி,காளப்நாயக்கன்பட்டி கிளை நபார்டு & NSTFDC உடன் இனைந்து நிதி சார் கல்வி முகாம் நடத்தியது

இதில் கிளை மேலாளர்,தமிழ்நாடு கிராம வங்கி காளப்பநாயக்கன்பட்டி செல்வராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு கிராம வங்கி துணை மண்டல மேலாளர் பாரதி தலைமை தாங்கினார்.தொடர்ந்து வங்கியின் சேவைகள் மற்றும் பெண் கல்வி சம்பந்தமாகவும் கொல்லிமலை வழுவில் ஓரி திருவிழா சம்பந்தமாகவும் கலந்துரையாடினார். ஓர் ஆன் படித்தால் அவரை மட்டுமே சாரும் ,ஒரு பெண் படித்தால் குடும்பமே முன்னேறும் என்று கூறினார்.

திருமதி.கிருஷ்ணவேணி,
மண்டல மேலாளர் ,NSTFDC
ஹைதராபாத் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பழங்குடி பெண்களின் ஆதாரமளிக்கும் திட்டம்.AMSY 2,00,000 வட்டி 4% சுய உதவிக் குழுக்கான சிறு கடன் திட்டம். MCS வட்டி 6% புள்ளி 5,00,000 வரை. பழங்குடியினர் கல்வி மையத் திட்டம். ASRY வட்டி 6% 10,00,000 வரை கடன் பெறலாம் எனவும். தாட்கோ கடன் வசதி சம்பந்தமாகவும் உரையாற்றினார்.
FLC விஜய பூபதி பிரதம மந்திரி சுரக்ஷா பீம யோஜனா,பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா சம்பந்தமாகவும். அடல் பென்ஷன் யோஜனா சம்பந்தமாகவும், பேசினார்.

தொடர்ந்து தமிழ்நாடு கிராம வங்கி காளப்பநாயக்கன்பட்டி கிளை காசாளர் கமலினி தனிநபர் வங்கி கணக்கு துவங்குதல் சம்பந்தமாக பேசினார்.

மேக்னம் ராசிபுரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் லீலாவதி SHG மற்றும் JLGயின் நோக்கம் சம்பந்தமாக பேசி நன்றியுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் சுமார் 200 கற்கும் மேற்பட்ட கொல்லிமலை மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *