இராசிபுரம்,மார்ச்,1-
இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஆயில் பட்டி ஊராட்சியில் திமுக விவசாய அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆயில் பட்டியில் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் என்.அய்யாதுரை தலைமை வகித்தார்.தொடர்ந்து ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த குமார், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன்,ஏ.பூவராகவன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.மேலும் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.