Category: அறிவியல் & தொழில்நுட்பம்

*வாழ்க்கையில் ஒன்று சேரமுடியவில்லை… திருமணமான இளம்பெண் முன்னாள் காதலனுடன் தற்கொலை*

சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா (வயது 19). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேணு (21). இவர்கள் 2 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அனுஷா, வேணுவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனுஷாவை வேறுவொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆடி மாதத்தையொட்டி அனுஷா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது காதலனை சந்தித்த அனுஷா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை காதலனிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து 2 பேரும் தொட்டபள்ளி கிராமத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதை பார்த்த கிராம மக்கள் கெஞ்சர்லஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்க்கையில் 2 பேரும் சேர முடியவில்லை என்பதால், ஒன்றாக குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெஞ்சர்லஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி கடலூர்:கடலூர் மஞ்சகு ப்பத்தில் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் உள்ளது.இந்த பஸ் நிறுத்தம்…

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை ஆண்கள் பள்ளியை…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் – 91.55%…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கமுதி பள்ளி மாணவி 500-க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை*

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கமுதி பள்ளி மாணவி 500-க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை கமுதி:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.…

மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 3 வாகனங்களின் உதவியுடன் சுமார் 2 மணி…

விவசாயிகளே கோடை உழவு செய்து கோடி நன்மை பெறுவீர் :-

நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளதாவது, கோடை உழவு விவசாயிகள் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால், கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது.…

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னைக்கு வந்த பாகிஸ்தானிய பெண்!

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னைக்கு வந்த பாகிஸ்தானிய பெண்! பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில்…

தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி வெயில்

தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது: வானிலை மையம் தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும்…

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு*

*💦 சென்னை: தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5…