Latest Post

*வாழ்க்கையில் ஒன்று சேரமுடியவில்லை… திருமணமான இளம்பெண் முன்னாள் காதலனுடன் தற்கொலை*

சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா (வயது 19). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேணு (21). இவர்கள் 2 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அனுஷா, வேணுவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனுஷாவை வேறுவொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆடி மாதத்தையொட்டி அனுஷா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது காதலனை சந்தித்த அனுஷா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை காதலனிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து 2 பேரும் தொட்டபள்ளி கிராமத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதை பார்த்த கிராம மக்கள் கெஞ்சர்லஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்க்கையில் 2 பேரும் சேர முடியவில்லை என்பதால், ஒன்றாக குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெஞ்சர்லஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
400 கி.மீ. பயணித்து ரத்த தானம்: இளம்பெண் உயிரை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது துறையூர் ஆத்தூர் சாலையில் சத்ய நாராயண சிட்டி அருகே கிருஷ்ணா பேருந்து விபத்து. பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி

தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்வு

தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்வு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் குறவகுடி ஊராட்சி கே.நாட்டார்பட்டி கிராமத்தில்…

எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, பாரத ரத்னா காமராசர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 2, 1975)

காமராசர் (காமராஜர்) ஜூலை 15, 1903ல் விருதுநகரில் பிறந்தார். பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே…