29.07 2022ஆம் தேதி இரவு வேலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பொத்தனூர் சக்கரா நகரில் உள்ள கம்பர் தெரு மற்றும் காந்தி தெருவில் வசித்து வரும் சிவக்குமார் மற்றும் பாப்பாத்தி ஆகியோர்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கும், மற்றொருவர் உறவினர் வீட்டுக்கும் சென்று இருந்த சமயத்தில் வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து சிவகுமார் வீட்டிலிருந்து தங்க நகைகளும் பாப்பாத்தி என்பவர் வீட்டில் இருந்து வெள்ளி பொருட்களும் திருடப்பட்டது தெரியவந்தது.இது சம்பந்தமாக வேலூர் காவல் நிலையத்தில் மேற்படி வீட்டின் உரிமையாளர்களின் புகார் அடிப்படையில் தனித்தனியே இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருட்டுட்டில் ஈடுபட்ட நபரை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் வீடுகளில் கதவை உடைத்து கள்ளக்கனவு குற்றத்தில் ஈடுபடும் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்திருப்பதாக தகவல் பெறப்பட்டு 24.8 2022-ம் தேதி ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் சென்று காவல் படுத்தப்பட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் தந்தை பெயர் செல்வராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர் பரமத்தி வேலூர் சக்கர நகரில் மேற்கண்ட வீடுகளில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது மேற்படி எதிரி கண்ணகளவு குற்றங்களில் வழக்கமாக ஈடுபடுபவர் என்பதும் அவர் மீது 10க்கும் மேற்பட்ட கன்னகளவு வழக்குகள் இருப்பதும் விசாரணை தேடி வந்தது மேற்படி வீடுகளில் திருடு போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் போலீசார் உதவியுடன் மேற்படி குற்றவாளிடமிருந்து கைப்பற்றப்பட்டது கைப்பற்றப்பட்ட திருடு போன சொத்துக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்து உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *