இராசிபுரம்,பிப்,18_

இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இராசிபுரம் ஆர் புதுப்பட்டியில் இன்று இந்த செயற்குழு கூட்டமானது நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில அரசு நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் மற்றும் மேற்பார்வையாளர் லோகேந்திரன் தலைமை வகித்தார்.தொடர்ந்து நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பிஜேபி தலைவர் டி. சிவகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.மேலும் இந்த கூட்டத்தில் ஆர் புதுப்பட்டி கிளை தலைவர் ஆர். தவமணி ,ஒன்றிய துணைத் தலைவர் கண்ணன், பழனிவேல், அழகேசன் சதாசிவம் ஆகியோர் தவிர ஒன்றிய செயலாளர் சூர்யா,ஒன்றிய பொதுச் செயலாளர் முருகலிங்கம் ,பிரகாசம் என கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இந்த செயற்குழுக் கூட்டத்தில் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய கார்கூடல் பட்டி பஞ்சாயத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசிடம் அனுமதி பெறுவது,வன எல்லையில் வசிக்கும் விவசாய மக்களுக்கு வனத்தில் கால்நடைகள் மேய்க்க அனுமதி சீட்டு பெற்று தருவது, அரசின் உதவியுடன் தேனி வளர்ப்பை பொதுமக்களிடம் ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *