ஈரோடு: ஈரோட்டில் சமீப காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் சளி, இருமல் இருந்து வருகிறது. மருத்துவமனைகளிலும் சளி, இருமல் பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கழுதை பால் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி (55) என்பவர் கழுதையை ஓட்டி வந்து கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கழுதை பால் சளி, இருமல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக இருப்பதால் மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். ஈரோடு ராமமூர்த்தி நகர் கிருஷ்ணம்பாளையம் கருங்கல்பாளையம் பகுதிகளில் இன்று மக்கள் போட்டி போட்டு கழுதைப் பாலை வாங்கி சென்றனர். பொதுவாக கழுதை பால் மருத்துவம் குணம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால் மக்களை விரும்பி கழுதை பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இது குறித்து முத்துசாமி கூறும் போது, நான் 20 வருடத்திற்கும் மேலாக கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பொதுவாக கழுதை பால் நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவ குணம் கொண்டதாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி வாங்கி அருந்துகின்றனர். ஒரு சின்ன சங்கு பால் ரூ.50 -க்கு விற்பனை செய்கிறேன். இதேப்போல் 50 மில்லி கழுதை பால் ரூ.250-க்கு விற்பனை செய்கிறேன். மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *