குமாரபாளையம் பேருந்து நிலையம் மற்றும் ஈரோடு பவானி பகுதியில் இருந்து 3 ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகிய 4பேர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் மீட்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையம் மற்றும் ஈரோடு, பவானி பகுதியில் இருந்து அட்சயம் அறக்கட்டளையின் மூலமாக ஆதரவற்று சுற்றித்திரியும் யாசகர்களை மீட்டெடுக்கும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 50-ற்கும் மேற்பட்ட யாசகர்களின் விவரங்கள் மற்றும் குறைகள் சேகரிக்கப்பட்டது. பின் அதில் ஒருவரான கண்மங்கலாக தெரியும் பெருமாள் வயது 70, சாந்தி வயது 45 (மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி), சிவகிரியை சேர்ந்த கல்யாணி வயது 56 மற்றும் பவானியை சேர்ந்த ரத்தினம்மாள் வயது 70 போன்ற ஆதரவற்ற நான்கு நபர்களை மீட்டு, குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிவித்து, காவல்துறையின் அனுமதியுடன் திண்டுக்கல்லில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் பெருந்துறையில் அட்சயம் அறக்கட்டளை மற்றும் பேன்யன் கீழ் இயங்கும் ECRC மனநல காப்பகத்தில் சேர்த்து மறு வாழ்க்கை வழங்கபட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *