டிசிஎம்எஸ் நிர்வாக இயக்குனர் அராஜக செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடத்துவதாக சிஐடியு சங்க மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்.திருச்செங்கோடு .அக.27-நாமக்கல் மாவட்டம்.திருச்செங்கோடு சிஐடியு சங்க அலுவலகத்தில் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் மாநில குழு உறுப்பினர்.எஸ்.சுப்பரமணியம். சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டு எடுத்த முடியின்படி சிஐடியு சார்பில் விடுவத்துள்ள செய்தி.திருச்செங்கோடு வேளான்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் 90 ஆண்டுகளாக இயங்கிவருகிறது இதன் கீழ் கொங்கனாபுரம். மல்லசமுத்திரம்.ஜலகண்டாபுரம். திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன இதில் 240 தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில்சிஐடியு தொழிற்சங்கம் 40 ஆண்டுகாலமாக அமைப்பு உள்ளது. திருச்செங்கோடு நகர பகுதிகளில் வீடுவீடாக சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியில் 5 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தொழிலாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்வதாக நிர்வாகம் அறிவித்தது இதனை எதிர்த்து சிஐடியு தொழிற்சங்கம் மூலம் தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் வழக்கு பதிவு செய்த பின்னர் 5 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தீர்ப்பு பெறப்பட்டது ஆனால் தற்போது வரை அவர்களை பணியில் மீன்டும் அமர்த்தாமல் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தனர். உதவி ஆணையர் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று தொழிற்சங்கத்தின் மூலமாக நிர்வாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுஆனாலும் பனியில் அமர்த்தாமல் பழி வாங்கி வந்தனர்.இதுகுறித்து தொழிற்சங்கம் மூலம் பேச்சுவார்த்தைக்கு சென்ற தலைவர்களையும் பணிபுரியும் தொழிலாளர்களை நிர்வாக இயக்குனர் விஜயசக்தி தொழிற்சங்கத்தை இழிவாகவும் தொழிலாளர்களை கேவலமாக மிரட்டியும் பண்ணை அடிமை போல் நடத்தி ஒருமையில் பேசியது போன்ற தவறான செயல்பாட்டில் நிர்வாக இயக்குனர் செயல்படுவதை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலாசி தொழிலாளர்களின் கூலி உயர்வு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்வு காண வேண்டும் எனவும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பில் திருச்செங்கோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற.1.11.2021 திங்கள் அன்றும் நவம்பர் 15 ஆம் தேதியன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *