இராசிபுரம்; மார்ச்,5_

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.
இங்கிருந்து உரம்பு செல்லும் வழியில் மங்களபுரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் செந்தில் குமார் என்பவரது விவசாய நிலம் உள்ளது.இவர் அதிமுக வை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஆவார்.இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகில் உள்ள சாலையை ஆக்ரமித்து அதில் கற்களை வைத்து உள்ளார்.மேலும் அந்த இடத்தில் மாட்டு சாணத்தை கொட்டி வைத்துள்ளார்.இதன் அருகில் சாலையில் புளியமரம் உள்ளது.எனவே சாலையில் வரும் வாகனங்களுக்கு போதுமான இடம் இல்லை.தற்போது உரம்பு வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழா நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள இந்த சாலை வழியாக செல்வார்கள்.தற்போது சாலை இட பற்றாக்குறை காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே அரசு தலையிட்டு ஆக்ரமிப்பை அகற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *