ராசிபுரம்,நவம்பர்.8 –ராசிபுரம் அருகே வையப்பமலை அடுத்த பெரியமணலி கிராமத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
பெரியமணலி சேர்ந்த சுந்தர்குமார் தலைமையில் எட்டு பட்டி ஊர் பெருமக்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்தி வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என முடிவு செய்தனர். இந்நிலையில் சுந்தரகுமார் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினரும், ஒருவருக்கு ஒருவர் எலச்சிபாளையம் காவல் நிலையத்திலும், நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.
இதனால் கோவில் வளாகத்தில் இருதரப்பினர் இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. எலச்சிபாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். இந்நிலையில் அங்கு சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளதால் திருச்செங்கோடு வட்டாட்சியர் கண்ணன் தலைமையில், திருச்செங்கோடு டிஎஸ்பி சீனிவாசன், எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் அதிகாரிகள் நேற்று கோயிலை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *