திருச்செங்கோட்டில் போட்டி தேர்வுக்களுக்கு இலவச பயற்சி வகுப்பு

திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயற்சி வகுப்பு தொடங்கியது.

காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், சார்பில் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுக்கான குருப் 2, மற்றும் குருப்4–க்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி திருச்செங்கோடு அவ்வை கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.கணேஷ்பாண்டியன் தலைமை வகித்தார். தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் வட்ட செயலாளரும் மைய ஒருங்கிணைப்பாளர் திரு.பாலசுப்பிரமணியன் வரப்புரையாற்றினார். தொடர்ந்து நிகழ்விற்கு ராசிபுரம் எல்.ஐ.சி. உதவி கிளை மேலாளர் திரு.க.முருகேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். தொடர்ந்து “”ஜெயிப்பது எப்படி””என்ற தலைப்பில் ஆதி திராவிடர் /பழங்குடினருக்கான பயிற்றுவித்து மற்றும் வழிகாட்டும் நிலையத்தின் உதவி இயக்குனர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் வந்திருந்த மாணவ மாணவிகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் கருத்துரையாற்றினார். பிறகு அரசு வழக்கறிஞர் ( ஒய்வு) அவ்வை கல்வி மைய தாளாளர் திரு.தி.கா.ராஜேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். மையத்தின் ஆலோசகர் வழிகாட்டி திரு.கணேஷ் அவர்கள் வகுப்பிற்கான வழிகாட்டுதலை வழங்கினார். இறுதியில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும், நேரம் தவறாமை போன்ற விஷயங்களையும், தனது அனுபவங்களை மாணவ மாணவிகளோடு பகிர்ந்து கொண்டு காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.தர்மலிங்கம் அவர்கள் வகுப்புகளை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் அனைத்து நிர்வாகிகள், மையத்தின் ஆசிரியர்கள் சார்பில் கௌரவ படுத்தபட்டனர். மையத்திற்கு நண்பர் மூத்த வழக்கறிஞர் திரு எஸ். சேகரன் அவர்கள் மூலம் கணேஷ்குமார் அவர்கள் ரூ 11000, மதிப்புள்ள ப்ரொஜெக்டர் கருவி வழங்கபட்டது. மூத்த வழக்கறிஞர் திரு .சி. பரணிதரன் வாழ்த்துரை வழங்கினார். இலவச கீ போர்டு வகுப்புகளும் திரு.எஸ்.கே.கவிகரன் கல்வி மைய வளாகத்தில் நமது மையத்தின் சார்பில் தொடங்கபட்டது. பத்து 10 ஆசிரியர் குழு அமைக்கபட்டது. நிறைவாக கலந்துகொண்ட அனைவருக்கும் ஊடகம், திரைக்கலைஞர் வழக்கறிஞர். திரு.ஜி.கோபி அவர்கள் நன்றி கூறினார். இதில் 70 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் மலை 5 மணிவரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *