சிறையில் இருந்து வந்த 3 கைதிகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் 80 சவரன் சங்கிலி பறிப்பு

நாமக்கல் நவ 12

சிறையில் இருந்து வந்த 3 கைதிகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் திருச்செங்கோடு, நாமக்கல்லில் என 20 இடங்களில் தொடர் சங்கிலிபறிப்பு வழிப்பறிப்பில் ஈடுபட்டு வந்தலர்கள் உள்ளிட்ட 10 நபர்கள் கைது 80 சவரன் நகைகளில் 50 சவரன் நகைகள் மீட்பு சேலம் சரக டி.ஐ.ஜி.மகேஸ்வரி நாமக்கலில் பேட்டி
சேலம் சரக டி.ஐ.ஜி.மகேஸ்வரி நாமக்கலில் நேற்று மாலை நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது சேலம் சரக டி.ஐ.ஜி.மகேஸ்வரி கூறியதாவது :-
சிறையில் இருந்து வந்தகுற்றவாளிகள் சங்கிலி பறிப்பு கொள்ளையில் ஈடுபட்ட 3 நபர்கள் வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் மற்றும் காரைக்கால், பாணிடிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் மேற்கொண்டதில் 20 இடங்களில் கடந்த சில வாரங்கள் சங்கிலிபறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர் இந்த சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை அறிவியல் சார்ந்த முறையில் போலீசார் விசாரணை செய்ததில் தினேஷ்குமார் (எ) சம்பவம் நினேஷ்குமார், இவர் சென்னையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட பிரபல குற்றவாளி ஆவார்
அடுத்து சசிக்குமார் மற்றும் .கருப்பசாமி ஆகிய மூவரும் சங்கிலிபறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேற்கண்ட நபர்கள் சென்னை புழல் சிறையில் இருந்த போது
அங்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், சிறையிலிருந்து வெளியே வந்ததும் வழிப்பறி செய்ய சிறையில் இருக்கும்போது திட்டமிட்டு, முடிவு செய்து சிறையில் இருந்து வெளியில் விட்டதும்சேலம் சரக டி.ஐ.ஜி.மகேஸ்வரி நாமக்கலில் பேட்டி* சென்னையில் ஒரு பல்சர் வாகனத்தை வாங்கி ஜூலை மாதத்திலிருந்து வழிப்பறி செய்ய சென்னையிலிருந்து கிளம்பியுள்ளனர்.

மேற்கண்ட குற்றவாளிகள் சென்னையிலிருந்து கிளம்பி சிதம்பரம், பாண்டிச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், திண்டிவனம், அரூர், கும்பகோணம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், சின்னசேலம், செஞ்சி, திருவண்ணாமலை, தண்டாரம்பேட்டை, வாலாஜா, ராணிப்பேட்டை, பள்ளிப்பாளையம், கரூர், நாமக்கல், மற்றும் வேட்டுவளம் ஆகிய 20 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

நடந்த 23.10.2021-ம் தேதி காலை 07.00 மணியளவில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீதா (47) என்ற பெண் அவரது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இந்த 3 நபர்கள் பல்சர் வாகனத்தில் வந்து அவரது கழுந்திலிருந்து 5 சவரன் தங்கசெயினை பறித்து சென்றனர்.இந்த சம்பந்தமாக, பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மேலும், 30.10-2021-ம் தேதி மாலை 04.00 மணியளவில் நாமக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரோஜா(59) என்பவர் நடத்து சென்று கொண்டிருந்தபோது அதே அடையாளம்சேலம் சரக டி.ஐ.ஜி.மகேஸ்வரி தெரியாத 3 நபர்கள் பல்சர் வாகனத்தில் வந்து அவரது கழுத்திலிருந்து 8 சவரன் தங்கசெயினை பறித்து சென்றனர். இந்த சம்பந்தமாக, நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகனை தேடி வந்தனர்.

இவ்வழிப்பறியின் மூலம் கிடைத்த நகைகளை காரைக்காலைச் சேர்ந்த முரூகேசன், செல்வம் மற்றும திருவாரூனரச் சேர்ந்த சதிஷ் ஆகியோரிடம் கொடுத்து வந்துள்ளனர்.

இது, சம்பந்துவாக, நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உத்தரவின் பேரில் காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் சுரேஷ், முத்துக்கிருஷ்ணன், காவல் ஆய்லாளர்கள் சசிகுமார், வேலுதேவன், சந்திரகுமார் மற்றும் பாண்டியன் ஆகியோர் தலைமையில் னசபர் க்ரைம் தனிப்படையினர், சிசிடிவி கேமராக்களை ஆராயும் குழுவினர் உள்பட 25 காவலர்கள் அடங்கிய தளிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

தனிப்படையினர் சங்கிலிபறிப்பு குற்றயாளிகள் 3 பேர் களுடன் சேர்த்து குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்த அருள், செல்வம், முருகேசன், மணி, சதிஷ், செல்லம்மாள் மற்றும் மதுரைவீரன் ஆகிய 7 குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 சவரன் தங்க நகைகளை வகப்பற்றப்பட்டது. அனைத்து குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். குற்றவாளிகளிடமிருந்து
கைப்பற்றப்பட்ட
வழக்குச்சொத்துக்கள் அனைத்தும்
நீதிமன்றத்தில் என்று.
சேலம் சரக டி.ஐ.ஜி.மகேஸ்வரி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *