பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் விழுந்து டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மகன் தற்கொலை..

நவம்பர் 12.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி என்ற ஊரைச் சார்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் விஜய் (எ) விஜயகுமார் (வயது 40) இவர் திருச்செங்கோட்டில் பாரத் டிரைவிங் ஸ்கூல் என்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு கீதா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இவர் இன்று காலை 9.40 மணி அளவில் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் இருக்கும் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலத்திலிருந்து காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் குதித்து திடீரென்று குதித்தார்.
இதை கவனித்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, அங்கு விரைந்த காவல்துறையினர் வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க அங்கு விரைந்து வந்த வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் பா.சிவக்குமார் அவர்கள் தலைமையிலான குழுவினர் மற்றும் மீனவ நண்பர்கள் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய விஜயகுமார் உடலை தேடும் பணி துவங்கியது. சிறிது நேர தேடலுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் சடலமாக விஜயகுமார் அவர்கள் உடல் மீட்கப்பட்டது.
இவர் காவிரி ஆற்றில் குதிக்கும் முன்பு ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து
பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்திற்கு வந்துள்ளார். அங்கு பாலத்தின் மேலே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தான் அணிந்திருந்த காலணிகளையும் கழட்டி அந்த இடத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்துள்ளார். கடந்த பல நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வெள்ளம் நிறைந்து செல்லும் காவிரி ஆற்றில் தன் உயிரை முற்றிலுமாக போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றில் குதித்து இறந்துள்ளார்.
மேலும் ஆற்றில் மூழ்கி இறந்துபோன விஜயகுமார் அவர்களின் உடல் பள்ளிபாளையம் போலீசாரால் கைப்பற்றப்பட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிபாளையம் துணை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் மேல் விசாரணை செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *