நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கல்யாணி ஊராட்சியில், கிழக்கு காட்டூர் கிராமத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங்., நேற்று பொதுமக்களின் வீடுகளுக்கு வீடு வீடாக சென்று அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனரா ?என்று கேட்டறிந்தார், அப்போது
101 வயது மூதாட்டி
வள்ளியம்மாள், என்பவரிடம் உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா ?என்று கேட்டதற்கு, அதற்கு தான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என்று அந்த மூதாட்டி கூறினார்,அப்போது
அவரையும் பாராட்டி, அவரது குடும்பத்தினரை பாராட்டினார் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங்.,
மேலும் இந்த வயதிலும், தனது வேலைகளையும் வீட்டின் வேலைகளும் செய்துக்கொண்ட இருப்பதை பார்த்து மாவட்ட ஆட்சித்தலைவர்
ஸ்ரேயா பி சிங்.,
அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்
ஸ்ரேயா பி சிங்.,
செம்பாம்பட்டி கிராமம், ஆர்.புளியம்பட்டி ஆகிய ஊராட்சியில் உள்ள பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனரா? என்று கேட்டறிந்து தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி போடும் படி பொதுமக்களிடம் ஊக்கப்படுத்தினார்
இந்த ஆய்வின்போது எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், குணாளான், சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புஷ்பராஜ்,
பாஸ்கரன், இராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், சேந்தமங்கலம் வட்டாட்சியர் சுரேஷ், இராசிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் உட்பட சுகாதார மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *