இராசிபுரம் பகுதியில் ஸ்ரீஅருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக நன்கொடை வழங்கப்பட்டது.


நாமக்கல் மாவட்டம்இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் உள்ள அத்திமரத்துக்குட்டை பகுதியில் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.இந்த அறக்கட்டளை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விடியலை நோக்கி அறக்கட்டளை உடன் இணைந்து தினமும் 25 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறது.தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு பல சேவைகளை செய்து வந்தது. இந்நிலையில் உரம்பு கிராமத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா நாளை நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக அக்னி குண்டத்திற்கு 2 டன் விறகு கட்டைகள் மற்றும் 50 கிலோ திருநீறு இன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீஅருள் முருகன் அறக்கட்டளை மாநிலதலைவர் எம்.எஸ்.அருள், மாநிலதுணை தலைவர் ஆர்.பிரபு, மாநில செயலாளர் எஸ்.பி. ஜெகதீசன், விடியலை நோக்கி அறக்கட்டளை மாநில தலைவர் எம்.பி.வீரமணிகண்டன், கெளரவ ஆலோசகர் ஏ.சிட்டிபாபு, , உரம்பு ஊர் கவுண்டர் கே.முருகேசன், கோவில் பூசாரி முத்து, அறக்கட்டளை உறுப்பினர்கள் கோபிநாத், வசந்தகுமார் ,ரவி,சாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *