இராசிபுரம்;அக்,5-

மங்களபுரத்தில் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் படத்திறப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.இங்கு அதிமுக சார்பில் முன்னாள்பஞ்சாயத்து தலைவராக இருந்தவர்.என்.ஜோதிலிங்கம் ஆவார்.இவர் அதிமுக முன்னால் ஒன்றிய கழக செயலாளர் மற்றும் மங்களபுரம் கூட்டுறவு சங்க தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மேலும் இந்த பகுதியில் கடந்த 50 வருடத்திற்கும் மேலாக அதிமுக கட்சியின் பல்வேறு வகையான வளர்ச்சிக்கு காரணமாக இருந்தார். அதிமுக இந்த ஒன்றிய பகுதியில் பல சாதனைகளை படைக்க இவர் பெரும்பங்கு ஆற்றினார். இந்த நிலையில் என். ஜோதிலிங்கம் அவர்கள் கடந்த 23 09/2023 அன்று இறந்து விட்டார். எனவே அதனை தொடர்ந்துஇன்று காலை 11 மணியளவில் என்.ஜோதிலிங்கம் அவர்களின் படத்திறப்பு விழா மங்களபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா தலைமை வகித்தார்.
ஒன்றிய கழக செயலாளர் இ.கே.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து என்.ஜோதிலிங்கம் அவர்களின்
மகன் பிரபாகரன் மருமகள் சித்ரா. மகள் காஞ்சிமொழி,கமலா,
ஒன்றிய கழக துணை செயலாளர்
எஸ்.ஏ சுப்பிரமணி,
ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஆர்.இராஜேந்திரன்..ஒன்றிய கழக பொருளாளர் எஸ்.ஏ.முருகேசன் ,கிளை செயலாளர் எ.சிவஞானம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *