இராசிபுரம்;அக்,2_

மங்களபுரம் கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டி மனு
அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.மேலும் 5000 உறுப்பினர் கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வேளாண்மை கடன் சங்கத்தின் மூலம் பயனடைகின்றனர் .இங்கு அரசு இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது தொடர்ந்து இந்த வேளாண்மை சங்கத்திற்கு தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர் .அது தவிர இங்கு நகை கடன் ,விவசாய கடன்,மகளிர் கடன், உடல் ஊனமுற்றோர் கடன் என பல்வேறு கடன் உதவிகள்வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு சுற்று சுவர் இல்லாத காரணத்தால் இந்த கூட்டுறவு சங்கம் பாதுகாப்பின்றி இருக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூட்டுறவு சங்க வளாகத்தை பொது வழியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே கூட்டுறவு சங்கத்தின் பாதுகாப்பு நலன் கருதிஅரசு தலையிட்டு இந்த கூட்டுறவு சங்கத்தின் சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும் என இன்று (2.10.2023)மங்களபுரம் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பொன்.முருகேசன், உதவி செயலாளர் பி.ரகுபதி, இயக்குநர் பி.பாலகிருஷ்ணன், விற்பனையாளர் கே.தங்கமுத்து ஆகியோர் மங்களபுரம் பஞ்சாயத்து தலைவரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மங்களபுரம் பஞ்சாயத்து தலைவர் கௌசல்யா முருகப்பன் அரசுக்கு தெரியப்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *