Author: admin_vidiyalainokki

நாமக்கல்லில் லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி..

நாமக்கல்;பிப்,5_ நாமக்கல்லில் லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கம்…

மங்களபுரத்தில் வன்னிய சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா..

இராசிபுரம்;பிப்,1-

மங்களபுரத்தில் மறைந்த மாநில வன்னியர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டியார் ஜெ.குரு அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது..

தொடர்ந்து இன்று 01.2.2024 இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் இவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது..இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் காடுவெட்டி குரு அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது…

இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மங்களபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பொன்.முருகேசன் தலைமை வகித்தார்.பாமக நாமகிரிப்பேட்டைமத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.என் ஆர்.நாகராசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பி.ஆர். எஸ் ராஜசேகரன்,மேலும் பாமக இளைஞர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டது.


மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

இராசிபுரம்;ஜன,27_ மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது. இங்கு…

மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

இராசிபுரம்;ஜன,27_

மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1500 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு லைட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் வாழப்பாடி ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான நீலம் தாண்டுதல் ஓட்டப்பந்தயம் , அகலம் தாண்டுதல் முதலிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன ,இதில், மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கவுன்சிலர் எஸ் .வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா முருகப்பன், பள்ளி மேலாண்மை குழு சரவணன், அருள், மங்களபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் முருகன், செந்தில்குமார் ,கந்தசாமி, கமலேஷ் ,தங்கதுரை, மற்றும் ஏராளமான பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த கூட்டுறவு சங்கமாக மங்களபுரம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் தேர்வு..

இராசிபுரம்;நவ,21- சிறந்த கூட்டுறவு சங்கமாக மங்களபுரம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் நவம்பர் 20 ம் தேதி 70 வது கூட்டுறவு வார…

தனிமையில் என் மனம்..

தனிமையில் என் மனம் அந்த ஒய்யார மலைத்தொடரில்உடலை சிலிர்க்கும்.சில்லென்ற குளிர் காற்று…மழை மேகங்கள்️ பெண்களின் கருங்கூந்தலை நினையூட்டியபடி,,,பள்ளிக்கு அவசரத்தில் செல்லும் குழந்தை போல,,,திரண்டு வந்தன…..பச்சை பசும் புல்…

திருச்செந்தூர் முருகன் கோயில் –
ஒரு கட்டிடக் கலை அதிசயம்

தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் – ஒரு கட்டிடக் கலை அதிசயம் !. பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி…

மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
மாணவ மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்
பரிசுவழங்கும் நிகழ்ச்சி…

இராசிபுரம்; அக்,30- மங்களபுரம்அரசுமேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பரிசுவழங்கும் நிகழ்ச்சி… நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இங்குள்ள அரசு…

ஐப்பசி மாத பெளர்ணமி
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம்………………

இராசிபுரம்;அக்,28-

ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் ஸ்ரீ வரம் தரும்
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வர மூர்த்தி பாளையம் உள்ளது.இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு பல ஆலையங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து பல இடங்களில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விழா நடைபெற்று வருகிறது.அன்னாபிசேகம் பார்த்தால் ஆயுள் முழுவதும் அன்னம் கிடைக்கும் என்பது நமது ஐதீகம் ஆகும்.
இதனை அடுத்து ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு தொடர்ந்து 11 ம் ஆண்டாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் தர்மகர்த்தா சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார்.ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும்சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இங்குஅம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இந்த பகுதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அக்டோபர் 19,நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை

சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார். இவர் 1906-ல் விடுதலைப் போராட்ட…