இராசிபுரம்; அக்,30-

மங்களபுரம்அரசுமேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்
பரிசுவழங்கும் நிகழ்ச்சி…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தபள்ளியில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பல்வேறு சிறப்பான செயல்பாடுகளை செய்து வருகின்றனர். மாணவ மாணவிகளின் விளையாட்டு மற்றும் கலைத்திறன் உள்ளிட்ட சிறப்புகளை வெளிப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இன்று (30.10.2023)ல் நடைபெற்ற விழாவில் கடந்த 2022மற்றும் 2023 ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் மதிப்பெண் பெற்ற 10,11,12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் , பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாச ராகவன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பி.எம் சரவணன் பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.மேலும் பொருளாளர் எஸ். கோபிநாத் , சத்தியசீலன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை தலைவர் எம் .எஸ் அருள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆர்.ரஞ்சிதா,முத்தழகி,ஜானகி பாபு, தனலட்சுமி, மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *