ஐப்பசி மாத பெளர்ணமி
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம்………………

இராசிபுரம்;அக்,28-

ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் ஸ்ரீ வரம் தரும்
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வர மூர்த்தி பாளையம் உள்ளது.இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு பல ஆலையங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து பல இடங்களில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விழா நடைபெற்று வருகிறது.அன்னாபிசேகம் பார்த்தால் ஆயுள் முழுவதும் அன்னம் கிடைக்கும் என்பது நமது ஐதீகம் ஆகும்.
இதனை அடுத்து ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு தொடர்ந்து 11 ம் ஆண்டாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் தர்மகர்த்தா சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார்.ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும்சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இங்குஅம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இந்த பகுதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Byadmin_vidiyalainokki

Oct 29, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *