தனிமையில் என் மனம்

அந்த ஒய்யார மலைத்தொடரில்
உடலை சிலிர்க்கும்.சில்லென்ற குளிர் காற்று…
மழை மேகங்கள்️ பெண்களின் கருங்கூந்தலை நினையூட்டியபடி,,,
பள்ளிக்கு அவசரத்தில் செல்லும் குழந்தை போல,,,
திரண்டு வந்தன…..
பச்சை பசும் புல் போர்த்திய புல்வெளி,,,,
மலை வண்டுகளின் ரிங்காரம்….
மழை வருவதை எண்ணி… ஆனந்த கூக்குரல் இடும் அழகு மயில்…連連連連
இவ்வேளையிலும்…
நீ…
எப்போது வருவாய் ….
என..
உன்னை,, எண்ணியபடி,,,
தனிமையில் என் மனம்…

கவிஞர்.( வீர நிலவன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *