இராசிபுரம்;ஜன,7-

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது.

இராசிபுரம் பகுதியில் உள்ள கார்கூடல்பட்டி ஊராட்சியில் உள்ள ஒன்பதாம் பாலி காடு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்குமாவட்ட விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. பிஜேபி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம், விவசாய அணி மாநில செயலாளர் விகேடி.ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் எஸ்.காளியப்பன், பிஜேபி கட்சியின் மாவட்ட செயலாளர் என்பி . சத்திய மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் க.அசோக்குமார், கிழக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் பி.மணிகண்டன்,டி.சரவணன், மாவட்ட திட்ட பொறுப்பாளர் எஸ்.அருள்பிரகாஷ்,மகளிர் அணி தலைவர் எம்.கோமதி, துணை தலைவர் எஸ்.சாந்தி,எஸ்.லலிதா, எஸ்.பாரதி,விவசாய அணி ஒன்றிய தலைவர் கே.செல்வகுமார், பிரபுஆகியோர் உட்பட 100 க்கும் மேற்பட்ட பொங்கல் வைத்து சுமார் 200 க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *