ஏப்ரல் 7

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

பாரதிய ஜனதா கட்சியின் 42-வது ஸ்தாபனம் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ரத்ததான முகாம் நலத்திட்ட உதவிகள் மரம் நடுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கண்டிப்புதூர் பகுதி அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோடை கால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.. இந்த நிகழ்விற்கு ஸ்தாபன நாள் நிகழ்ச்சி நகர பொறுப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.. லட்சுமிநாராயணன் நெசவாளர் அணி பிரிவு அவர்கள் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்… மற்றும் ஆனந்தா ராகவன் மகளிரணி, பாலாஜி ஈஸ்வரன் நகர தலைவர் அரசு தொடர்பு அணி பிரிவு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி ,பழம் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் கனி வகைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வழிகாட்டுதல்படி இந்த நீர்மோர் பந்தல் ஆனது சேவை வாரமாக அனுசரிக்கப்பட்டு இந்த வாரம் முழுவதும் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் செயல்படும் என பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *