மயிலாடுதுறை மாவட்டம் கீழ நாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25). இவர் நேற்று இரவு சக நண்பர்களான மணி ,விக்னேஷ் ,பிரேம்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறையில் உள்ள பஜனைமட தெருவிற்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். நள்ளிரவு என்பதால் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில் அந்த கடையில் உரிமையாளர் உதவியோடு அவை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த தமிழ்மணி என்பவர் மதுபான கடைக்கு அருகாமையில் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக ‌மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவா மற்றும் அவரது நண்பர்கள் தமிழ்மணியிடம் மது கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜீவாவை வயிற்றில் குத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் படுகாயமடைந்த ஜீவாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர் . அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜீவா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்மணி என்பவனை பிடித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இறந்த ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த நபரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *