கரூர்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்துள்ளார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் கரூர் பயணியர் மாளிகையில் இருந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானத்திற்கு வருகை தருகிறார். அதன் பின்னர் விழா மேடையில் 80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றுகிறார். மேலும் கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் வழியில் 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வழிநெடுகிலும் நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *