கொல்லிமலை;ஆக,14_

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நத்துக்குளி பட்டி கிராமத்தில் இன்று சர்வதேச பழங்குடியின தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது ..இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு ஆதி வாசி பழங்குடியினர் வாழ்வாதார இயக்க தத்தின் இயக்குனர் ரங்கநாதன் தலைமை தாங்கினார்..

தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராஜ்
பழங்குடியினருக்கான மாவட்ட திட்ட அலுவலர் பீட்டர்
ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்,.

இந்த கருத்தரங்கில் கொல்லிமலை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர் …

இதில் பங்கேற்றவர்கள் மலைவாழ் மக்களுடைய வாழ்வாதாரம் கிராம சீரமைப்பு மக்கள் முன்னேற்றம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஆதிவாசி பழங்குடியினர் மக்கள் மீது தாக்குதல் குறித்து மலைவாழ் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன..

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் ஆதிவாசி பழங்குடியினர் வாழ்வாதார இயக்குனர் ரங்கநாதன் கொல்லிமலையில் 6000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களை தவறுதலாக தனியார் நிறுவனம் போலி பத்திரங்கள் மூலம் கையகப்படுத்தி உள்ளது

அந்த போலி பத்திரங்களை ரத்து செய்து தமிழக அரசு சம்பந்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நிலங்களை திருப்பி தர வேண்டும்

நில உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து பழங்குடியினர் மக்களுக்கும் நில உரிமை பட்டாவை வழங்க வேண்டும்

நெடுங்காலமாக தரிசு நிலங்களில் பயிர் செய்து வரும் பழங்குடியினர் மக்களின் பட்டா தடை செய்யும் 1168 அரசாணையை தமிழக அரசு விளக்கிக் கொள்ள வேண்டும் மேலும் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளை அரசியல் சாசன 5 வது அட்டவணையின் கீழ் சேர்ப்பதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்
என ரங்கநாதன் தெரிவித்தார்பின்னர் பொதுமக்களின் கருத்து கேட்பு மற்றும் அடிப்படை தேவை குறித்து கேட்கப்பட்டன என்று குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *