இராசிபுரம்;ஆக,22-

மங்களபுரத்தில் இரு தரப்பினரிடம் கோவில் நில பிரச்சினை தொடர்பாக
கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில் அத்திமரத்துகுட்டை எனும் இடத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஸ்ரீ ஆனந்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது .அதே பகுதியில் பிரபு என்பவர் தனது விவசாய நிலத்திற்கு அந்த கோவில் வழியாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு தரப்பினரிடம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக கோவில் வழிபாட்டாளர்கள் விவசாயி பிரபுவின் விவசாய நிலத்திற்கு செல்லும் அரசுபுறம்போக்கு பகுதியில் உள்ள வழித்தடத்தை கற்களை கொண்டு மறித்திருந்தனர். இதனை அடுத்து ஆனந்தாயி அம்மன் கோவிலில் நாளை(22.08.2023) பொங்கல் விழா நடைபெற இருந்தது.இது தொடர்பாக விவசாயி பிரபு தனது விவசாய நிலத்திற்கு செல்லும் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வழிதடத்தை கற்களை எடுத்து அகற்றிவிட்டு பிறகு கோவில் விழா நடைபெற வேண்டும் என்று மங்களபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு கடந்த வெள்ளிக்கிழமை அளித்து இருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையின் இடம் மனு அளித்து அரசு பரிந்துரைப்படி விவசாய நிலத்திற்கான சாலையை பெற்றுக் தருவதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். மேலும் விவசாய பிரபு உடனடியாக விவசாய நிலத்திற்கு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மங்களபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ் இடம் புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட மங்களபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ் இது குறித்து உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *