குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சுற்றுலா துறை அமைச்சர், ராஜ்ய சபா எம்.பி. ஆய்வு

குமாரபாளையத்தில் ஜனவரி 27ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்பி. ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆர்.டி.ஒ. இளவரசி, டி.எஸ்.பி. சீனிவாசன், தாசில்தார் தமிழரசி இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, கால்நடை மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் கூறுகையில், குமாரபாளையத்தில் S.S.M. பொறியியல் கல்லூரி பின்புறம் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்பி. ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆர்.டி.ஒ. இளவரசி, டி.எஸ்.பி. சீனிவாசன், தாசில்தார் தமிழரசி , இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், கால்நடைத்துறையினர் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினர் என அவர் தெரிவித்தார்.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறுகையில், வியாழக்கிழமை (ஜனவரி 27இல்) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டோம். அரசு கூறிய விதிமுறைப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 150 பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இரண்டு தடுப்பூசி போட்டு, 24 மணி நேரம் முன்பு நெகடிவ் ரிசல்ட் காண்பித்தவர்கள் மட்டும் அனுமதிக்கபடுவார்கள். 6 ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *