, நவ.17

சீராப்பள்ளி பொது கிணற்றில் மண் சரிந்து விழுந்ததை உடனடியாக சீரமைத்துள்ளனர்.

ஆத்தூர் பிரதான சாலையில் சீராப்பள்ளி பேரூராட்சி உள்ளது. சுமார், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சீராப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் மெயின் வழியில் சாலையோரம் பொது கிணறு உள்ளது. இப்பகுதியில் காவேரி கூட்டு குடிநீர் வருவதற்கு முன்பு இதுதான் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்தது. தற்போது கோவில் விழா காலத்தில் கம்பங்களை விடுவதற்கு இந்த கிணறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக கிணற்றின் ஓரம் இருந்த மண் சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனால், அருகில் இருந்த மின் கம்பமும் கிணற்றில் விழுந்துவிடும் ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து மின்சாரத்துறை ஊழியர்கள் உடனடியாக கம்பத்தை மாற்றினர். பாதிக்கப்பட்ட கிணற்றை ஆய்வு செய்த எம்.பி., கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் உடனடியாக கிணற்றை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க பரிந்துரை செய்தார். இதையடுத்து இரண்டே நாட்களில் நெடுஞ்சாலைத்துறையினர் கிணற்றுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலி அமைத்தனர். இப்பணியை செவ்வாய்க்கிழமை கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்.., எம்.பி பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தடுப்பு சுவர் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்த சிறிய மழைக்கே தடுப்பு சுவர் தாங்காமல் முற்றிலுமாக இடிந்துவிட்டது.

கருங்கல்லில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்க வேண்டும். ஆனால் ஏழு ஆண்டுகளில் இந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதுபோன்ற கட்டுமான பணிகள் எல்லாம் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கூடிய விரைவில், கான்கிரிட் தடுப்பு சுவர் அங்கு அமைக்கப்படும் என்றார்.

உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் கே.பி. ராமசுவாமி, பேரூர் செயலாளர்கள் செல்வராஜ், அன்பழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரண் கோகுல் , மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *