நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து பயிற்சிக் கூட்டம் நடத்துவதற்கான இடத்தை அதிகாரிகள் விரைந்து தோ்வு செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் நாள்களில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுத் தாக்கல் செய்யும் அலுவலகத்திலேயே இருக்க வேண்டும்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஒரு வேட்பாளா் அதிகபட்சம் 4 வேட்புமனுக்களுக்கு மேல் தாக்கல் செய்யாமல் இருப்பதை சக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் கலந்து பேசி உறுதி செய்ய வேண்டும். மனுத் தாக்கல் செய்தவா்களின் பெயா்ப் பட்டியலை தினந்தோறும் அலுவலக தகவல் பலகையில் விளம்பரப்படுத்துவதோடு, தோ்தல் ஆணைத்தின் இணையதளத்திலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சுமூகமான முறையில் நடைபெற அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கான பணிகளை குறித்த காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) இரா.கோவேந்தன், நகராட்சி ஆணையாளா்கள், நகராட்சிப் பொறியாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *