பழனி வழியாக செல்லும் திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். வாகன பெருக்கம், விபத்து தடுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பழனி-ஒட்டன்சத்திரம் சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

அதன்படி முதற்கட்டமாக பழனி-ஒட்டன்சத்திரம் இடையிலான சாலை விரிவாக்கத்துக்கு நிலஅளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் சாலையோர மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இதேபோல் பல்வேறு இடங்களில் சாலைகளில் பாலம் கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, சாலை விரிவாக்கத்துக்காக இடையூறாக உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படுகிறது. அதேவேளையில் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக வனத்துறையினருடன் இணைந்து புதிதாக மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகிறது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *