50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்களபுரம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ள நிலையில்இங்கு பணி புரியும் அரசு மருத்துவர்கள் கிளினிக் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்துவதால் அங்கு நோயாளிகள் வர வேண்டும் என்பதற்காக அரசு மாத்திரைகளை யாருக்கும் தராமல் சுடுகாட்டில் கொட்டி எரிப்பதாக குற்றச்சாட்டு….

நாமக்கல்:இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் ஊராட்சியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது…

மங்களபுரத்தை சுற்றியுள்ள உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையை நம்பியே உள்ளனர்.

இருந்த போதும் இந்த மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதும் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து நோயாளிகளை வர வைப்பதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது…

இதை தொடர்ந்து மங்களபுரம் பகுதியில் உள்ள எருமபட்டி மயானத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் விலையுயர்ந்த கால்சியம் கார்பனேட் மற்றும் வைட்டமின் டி3 மாத்திரைகள் பல இடங்களில் குவிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

அரசு மருத்துவமனை மாத்திரைகள் கொட்டி எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து மங்களபுரம் அரசு மருத்துவமனையில் பணியில் உள்ள பாலாஜி (மருத்துவமனை அருகிலேயே தனியாக கிளினிக் வைத்து நடத்துபவர்) மருத்துவரிடம் கேட்ட போது :

ஆமாம் இது அரசு மருத்துவமனை மாத்திரைகள் தான், அங்கு எப்படி போனது என எனக்கு தெரியாதுஎன கூறினார்.

விலை உயர்ந்த அரசு மாத்திரைகள் குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் குறித்து மங்களபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *