இராசிபுரம்; பிப்,2_

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் பாமக ஜெ.குரு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.குரு Ex. Mla அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் ஊராட்சி தாண்டகவுண்டான் பாளையம் கிராமத்தில் அவரது உருவப்படத்திற்கு
மலர் தூவி மரியாதை
செய்யப்பட்டது. மேலும் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுஇதில்
சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்ட செயலாளர் பி .கே செந்தில் , எக்ஸ் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு கேபிள் டிவி ராஜேந்திரன் மற்றும் மாவட்ட சமூக ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர் விஜய் கலந்து கொண்டனர் .தொடர்ந்துஇதில் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் நடராஜ் தலைமை வகித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பாமக கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர்கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *