நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவில் ஆர்ப்பாட்டம்:நாமக்கல் மாவட்ட மாதர் சங்க மாவட்ட குழு தீர்மானம்

நாமக்கல்.பிப்.15-

நாமக்கல் மாவட்டம்.திருச்செங்கோடு வட்டம்.எலச்சிபாளையம் சங்க அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.திலகவதி தலைமையில் நடைபெற்றது.
இதில் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.அலமேலு. மாவட்ட பொருளாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம். மோகனூர் வட்டம் நஞ்சை இடையாறு வாழவந்தி பகுதியில் சில நூறு குடும்பம் சுய உதவி குழுக்கள் அமைத்து தமிழ்நாடு கிராம வங்கியில் சிஆர்டி என்ற தொண்டு நிறுவனம் மூலம் மேற்படி வங்கியில் கடன் பெற்று அதனை சுய உதவி குழுக்களின் பெண்களை சில ஆயிரம் பேரை 5 பேர் வீதத்தில் குழுக்கள் அமைத்து அவர்களுக்கு ரூ.40,000 வரை கடன் அளித்து அதனை வசூல் செய்து வங்கியில் செலுத்தும் பொறுப்பை மேற்படி தொண்டு நிறுவனம் ஏற்று செயல்படுத்தியது

பின்னர் சுய உதவி குழுவில் உள்ள பெண்கள் தங்களது கடனை வசூல் செய்ய வரும் ஏஜென்ட் இடம் பணத்தை வழங்கிய போது அதனை உரிய வங்கியிடம் வசூலித்த தொகையை கட்டாததால் பெரும் மோசடி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து 2021 மார்ச் மாதத்தில் காவல்துறை முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவரிடம் வங்கி வசூல் செய்து கொள்வோம் எனவும் கடன் பெற்ற பெண்களை நேரடியாக வங்கி அணுகாது என்றும் தொண்டு நிறுவனத்திடமிருந்து சட்டப்படி வசூல் செய்து கொள்வோம் என வங்கி அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்

பின்னர் வாக்குறுதிகளை கைவிட்டு விட்டு சம்பந்தப்பட்ட பெண்கள் மீது வழக்கு தொடுக்கும் வகையில் நோட்டீஸ் வழங்கி வருகின்றார்கள் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நபர்களோடு ஏமாற்றிய தொகையில் பங்கு போட்டுக்கொண்டு வங்கி அதிகாரிகளோடு கூட்டு சேர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருவதால் பல பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் உடனடியாக கடனை கட்ட வேண்டும் என்று மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவே மோசடியில் ஈடுபட்டநபர்களிடமிருந்து கட்டிய பணத்தை மீட்டு வங்கியில் செலுத்தி கொள்ள வேண்டும் ஏற்கனவே காவல்துறையில் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் சுய உதவி குழு பெண்களை கட்டாயப்படுத்த கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருகின்ற மார்ச் 5 தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை மலை காவல் அம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வரும் பகுதிகள் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி 28.2.2022 அன்று வையப்பமலை ஆர்ஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்.
எலச்சிபாளையம் ஒன்றியம் நல்லிபாளையம் செம்பாம்பாளையத்தில் குழந்தைகள் நல கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி 21. 2.2020 அன்று ஆர்ப்பாட்டம் எலச்சிபாளையம் பிடியோ அலுவலகம் முன்பு நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *