மேட்டுப்பாளையம் விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி “முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்” பரமத்தி வட்டாரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகளுக்கு, மானாவாரி நில மேம்பாட்டு ‘ பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் திரு.செ.கோவிந்தசாமி அவர்கள் பயிற்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், விவசாயிகளுக்கு மானாவாரி நில மேம்பாடு மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பயிர் இரகங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், மண் வளம், சமுக காடுகள் அமைத்தல் போன்ற காரணிகள் குறித்து பயிற்சி வழங்கினார். பயிற்சியில் திரு.வி.ஆர்.மாதேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு) அவர்கள் பயிற்சியில் கோடை காலத்தில் கிடைக்கும் மழை நீரைப் பயன்படுத்தி உழவு செய்வதால், மண்வளத்தை மேம்படுத்தலாம். மண் அரிமானம் தடுக்கப்பட்டு, காற்றோட்டம் கிடைக்கும். அடுத்தடுத்து பொழியும் மழைநீர் வீணாகாமல், அந்த நிலத்திலேயே உறிஞ்சப்படுவதால், மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. பயிர் சுழற்சி, பருவப்பயிர்கள், சிறுதானியப்பயிர்கள் மற்றும் அருந்தானியப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் குறைந்த நாளில் அதிக மகசூல் அதிக லாபம் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.

பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு.பு.ரகுபதி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் திரு.மா.இரமேஷ் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், தமிழக முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கி நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.
வேளாண்மை உதவி இயக்குநர்,
பரமத்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *