தமிழகத்தில் ஊரெங்கும், சாலையெங்கும் மதுக்கடைகளை அரசு நடத்தி வருகிறது. காலை 10 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் மதியம் 12 மணியாக குறைக்கப்பட்டது. ஆனால், இரவு 10 மணி வரை கடை இருக்கும் என்ற பழைய நடைமுறை உள்ளதால் விற்பனையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. கடை எப்போடா திறப்பார்கள் என்று காலையிலேயே கடை முன்பு காத்திருக்கும் பலர் பிளாக்கில் சரக்கு வாங்கி அடித்து காலையிலேயே போதையை ஏத்திக்கொள்கின்றனர்.

இதில், பெண்களும் விதிவிளக்கல்ல என்பதை காட்ட பல இடங்களில் பெண்களும் போதையை ஏத்திக்கொண்டு பொது இடங்களில் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். அண்மையில் திண்டுக்கல் அரசு பேருந்தில் ஒரு பெண் மது போதையில் சக பயணிகளை கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசைபாடும் வீடியோ சமூக ஊடகங்களில் தீயாக பரவியது. இந்த நிலையில், மீண்டும் ஒரு பெண் மது போதையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தகராறு செய்யும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வியாபாரத்திற்காக வும் சுற்றுலா செல்வதற்கும் வந்து செல்லும் தமிழகத்தின் மையப்பகுதியாக திண்டுக்கல் பேருந்து நிலையம் உள்ளது.

அப்பார்ட்மென்டில் ரகளை… பெண்ணின் முடியை பிடித்து இழுத்து களேபரம்..! வைரல் வீடியோ

இந்த பேருந்து நிலையத்தில் தினமும் பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. பேருந்து நிலைய தெற்கு வாசல், மதுரை, தேனி, கொடைக்கானல் வத்தலகுண்டு ஆகிய பேருந்துகள் நிற்கும் இடங்களின் வழியாக ஒரு பெண் குடி போதையில் ஆண் ஒருவரை அடித்து ஆபாசமாக பேசி நடந்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், குடிபோதையில் ரகளை செய்த பெண் யார்? அவர் அந்த ஆணை ஏன் அடித்தார் என்பதை குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *