குன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை கரடி தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் வலம் வருவதும் சிசிடிவி காட்ச்சிகள் வெளி வருவதும் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில்

குன்னூர் அருகே பேரட்டி பகுதியில் ராமன் என்பவரது வீட்டில் தொடர்ந்து இரண்டு சிறுத்தைகள் வலம் வருவதும் இதுவரை இவரது வளர்ப்பு நாய்கள் சிறுத்தை தூக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 29/7/22 மற்றும் 31/8/22 அன்றும் இரவு இரண்டு சிறுத்தைகள் இவரது வீட்டை கேட்டை தாண்டி நுழைவதும் அங்கு பொறுத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்பொழுதும் அவர் இரண்டு வளர்ப்பு நாய்களை வளர்த்து வரும் நிலையில் அதனை வேட்டையாட நோட்டமிடுவதாக கூறப்படுகிறது. தகவலறிந்த கட்டபெட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதேபோல் கடந்த வாரம் முன் குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டின் கேட்டை தாண்டி சிறுத்தை ஒன்று தொடந்து நோட்டமிட்டது. அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிக மக்கள் வசிக்கும் பேரட்டி குடியிறுப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். உயிர் பலி எதுவும் ஏற்படும் முன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *