அக்டோபர் 30_

மதுரை கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேடை கலைவாணர் என அழைக்கப்படும் N.நன்மாறன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மதுரையில் காலமானார். இந்நிலையில் அவருக்கு தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், முற்போக்கு அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் செய்தி தெரிவித்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் சிஐடியு சங்க அலுவலகத்தில் பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்.நன்மாறன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கினார். மேலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.என் .நன்மாறன் குறித்த அரசியல் பயணம் மற்றும் அவர் எதிர்கொண்ட அரசியல் பாதை பணியாற்றிய விதம் குறித்து தோழர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் மாவட்ட குழு உறுப்பினர்
கே மோகன் வாலிபர் சங்க செயலாளர் லட்சுமணன் மற்றும் கிளை செயலாளர்கள் முன்னணி ஊழியர்கள் திரளாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *