பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் நால் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர் .

டிசம்பர் 3

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நால் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு v.m. ராஜேந்திரன் cwfi மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக ஜிஎஸ்டி வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுபடுத்திட வேண்டும், கட்டுமான தொழிலை, கட்டுமான தொழிலாளர் சட்டங்களை சீரழிக்க கூடாது, பணப்பயன்களை தொழிலாளர் பங்களிப்பு தொகையுடன் இணைக்க கூடாது. ஆன்லைன் பதிவுடன் நேரடி பதிவையும் இணைக்க வேண்டும். நலவாரிய கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நல வாரியம் கூடுவதை உத்திரவாதபடுத்திட வேண்டும்.
வீடு இல்லாத கட்டுமான தொழிலாளிக்கு இலவச வீடு அடுக்குமாடி குடியிருப்பு வீடு கட்ட வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் சரபோஜன் மாவட்ட துணைத்தலைவர், கண்ணன் மாவட்ட பொருளாளர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் துரைசாமி ,
ராஜா ,
பி.துரைசாமி S.முத்துக்குமார் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்
கே.மோகன் மாவட்ட தலைவர் விசைத்தறி தொழிலாளர் சங்கம் ,
M.அசோகன் சிஐடியு மாவட்ட தலைவர்
உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக பள்ளிபாளையம் நால் ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை பள்ளிபாளையம் காவல்துறையினர் கைது செய்து பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *