இராசிபுரத்தில்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு..

டிசம்பர் 3
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராசிபுரம் சுமங்கலி மஹால் அரிமா திருமண மண்டபத்தில்*
நடைபெற்றது

ராசிபுரத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கலந்துக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரிமா திருமண மண்டபத்தில் உள்ள சுமங்கலி மகாலில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கலந்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்திறன் போட்டிகளான பாட்டுப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகளும், வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி சம்பந்தமான தகவல்கள் வழங்கப்பட்டது..

50 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன..

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த
நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குனர் முன்னாள் கவுன்சிலர்
வி.சுந்தரம் தலைமை தாங்கினார்..

இந் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர். மணிகண்டன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளரான
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்
சிறப்புரை ஆற்றி 50 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் காய் கறிகளை வழங்கினார்..

சிறப்பு அழைப்பாளரான ஆர்.செந்தில் ரத்தினம் அவர்கள்
(ஸ்ரீ சாய் அம்ருதம் சேவா டிரஸ்ட் ,சேலம் ‌)
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தான ஆலோசனைகளை வழங்கியதோடு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கி அனைவருக்கும் மதிய உணவை வழங்கினார்..

மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர்
எஸ் அரங்கசாமி,

முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் வி.பாலு அவர்களும்

அனைத்திந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட பொருளாளர் தோழர் மீனா, சி.பி.ஐ. திராவிடர்விடுதலைக் கழகத்தின் நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி,

ம.தி.மு.க.இராசிபுரம் ஒன்றியச் செயலாளர் கைலாஷ் வழக்கறிஞர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் பழனிச்சாமி, முன்னிலை வகித்தனர்..

மேலும் நிகழ்வில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் அரசன்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மணிமாறன்,

திராவிடர்விடுதலை கழகத்தின் மல்லசமுத்திரம் ஒன்றிய பொறுப்பாளர் பெரியண்ணன்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர துணைச் செயலாளர் சுகுவளவன்,

கோல்டன் நற்பணி சங்கத்தின் தலைவர் குபேர் தாஸ்,
செயலாளர் இளங்கோ மற்றும்
மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சார்ந்த பூபதி ,
விஜயகுமார் ,வி.சி.கட்சி
ஆகியோரும் கலந்து கொண்டனர்..

இறுதியாக
திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகரச் செயலாளர்
பிடல் சே குவேரா நன்றியுரை கூறினார்..

இதனை தொடர்ந்து

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

மாற்றுத்திறனாளிகள் தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்ளக் கூடாது, குடியிருப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்பு வழங்க வேண்டும், அரசு வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருந்தாலும் இது முழுமையாக நடைபெறுகிறதா என கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும், எல்லா ஒளிபரப்புகளிலும் சைகை திறன் இணைத்துக் கொடுக்க வேண்டும் என்றார், அரசு அதிகாரிகள் வழியாக தங்களுக்கென நலத்திட்டங்கள் அறியாத மாற்றுத்திறனாளிகளுக்கு அதனை அறிந்து கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *