பள்ளிபாளையம் நால்ரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டிசம்பர்-6

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அதிமுக கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை மெரினாவில் அமைந்துள்ள செல்வி ஜெயலலிதா அவர்களின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாக்குதல் தொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்வைக் கண்டித்தும் அதிமுக. நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்காத திமுக அரசைக் கண்டித்தும் தாக்குதல் தொடுக்க முயற்சித்த நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் அதிமுக பள்ளிபாளையம் நகர ஒன்றிய பேரூர் கழகங்கள் சார்பில் இன்று பள்ளிபாளையம் நால்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளராக அ.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார்.
ஒன்றிய கழக செயலாளர் எஸ்.செந்தில் அம்மா பேரவை செயலாளர் அண்ணன்
டி கே சுப்பிரமணி கூட்டுறவு சங்க தலைவர் திருமூர்த்தி, நகரக் கழக துணைச் செயலாளர் ஜெய்கணேஷ், ஆலாம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் தனசேகர்

ஆலாம்பாளையம்பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்வதுரை,பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார்,ஆயக்காட்டூர் வேல்முருகன்,
,படைவீடு பேரூர் கழக செயலாளர் ஜெகநாதன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வாசு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சிவகுமார், நகர மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா, வைத்தீஸ்வரன் , முஸ்தபா, தொழிலதிபர் பிஎஸ் கந்தசாமி , பாசறை செயலாளர் வடிவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன், சுரேஷ் ,ராஜ்குமார், மகேந்திரன், கணேசன், அரங்கநாதன், மோகன், விஜயராகவன்,

மற்றும் நகர கழக நிர்வாகிகள்,ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவினர், சார்பு அணியினர்
,திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *