பொள்ளாச்சியில் நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை

பொள்ளாச்சி.. ஜூலை..

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வேங்கை செல்வ பிரபு என்பவர் தனது நிலத்திற்கு DTCP தடையில்லா ஒப்புதல் சான்று வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்

நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக உதவி பொறியாளர் செந்தில்குமார் 2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது
இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு‌ போலீசாரிடம் செல்வபிரபு புகார் அளித்தார்

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய பணம் 30 ஆயிரம்‌ பணத்தை பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்த உதவி பொறியாளர் செந்தில்குமாரிடம்
செல்வ பிரபு வழங்கியுள்ளார்

பின்னர் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக‌ அலுவலகத்திற்கு புகுந்து செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்தனர்
கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் ஆய்வாளர்கள் லதா மற்றும் பரிமளா தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி பொறியாளர் செந்தில்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *