பள்ளிபாளையம்

ஏப்ரல் 25

படித்த இளைஞர்களுக்கு வேலை கொடு, ஒன்றிய, மாநில அரசுத் துறையில் உள்ள காலிபணியிட முறைமையை முழுமையாக நிறைப்பிடகோரியும், உழைப்பை சுரண்டும் தற்காலிக ஒப்பந்த அவுட்சோர்சிங் திட்ட அடிப்படையில் நியமனத்தை தவிர்த்திட கோரியும், தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த. வேண்டும், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற வசதி ஏற்படுத்தி தர கோரியும்,காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை,, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி என தமிழகத்தில் நான்கு முனைகளில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பிரச்சாரத்தை கடந்த ஏப்ரல் 21-இல் துவக்கினர்.
மே 1ஆம் தேதி இந்த சைக்கிள் பிரச்சாரமானது திருச்சியில் சங்கமித்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை வாலிபர் சங்க மாவட்ட குழு சார்பில் புறப்பட்ட சைக்கிள் பிரச்சாரம் பயணம் திருப்பூர் ,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வந்தடைந்தது. சைக்கிள் பிரச்சார குழுவினருக்கு பள்ளிபாளையம் வாலிபர் சங்கத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.. மேலும் ஆவாரங்காடு சனிசந்தை திடல் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு
இ. கோவிந்தராஜ் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்..
எம்.லட்சுமணன் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வரவேற்ப்புரை ஆற்றினார். சி.பால சந்திரபோஸ் வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர்,
எஸ் மணிகண்டன் வாலிபர் சங்க மத்தியகுழு உறுப்பினர்,
கே.எஸ்.கனகராஜ் வாலிபர் சங்க மாநில துணை தலைவர்,
கே.எஸ்.பாரதி வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினர், தோழர் கற்பகம் மாநில குழு உறுப்பினர்,
என் கண்ணன் நாமக்கல் மாவட்ட செயலாளர்,
தோழர் எம்.மணிகண்டன் ஒன்றிய செயலாளர் வடக்கு ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சைக்கிள் பிரச்சாரப் பயணத்தின் நோக்கங்கள் குறித்தும் கோரிக்கைகள் குறித்தும் பொதுக்கூட்டத்தில் பேசினார்… ஆர்.லெனின் ஒன்றிய தலைவர் நன்றியுரை கூறினார். மேலும் இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்க தோழர்கள் சைக்கிள் பிரச்சார பயணத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *