இன்று நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வட்டம் ஊனான்தாங்கல் பஞ்சாயத்தில்உடல்ஊனமுற்றோர்க்கான விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மெர்சி கிராம முன்னேற்ற சங்கம் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய பல்வேறு ஊனமுற்றோர் கள் மேம்பாட்டு நிறுவனம்(NIEPMD) இணைந்து பட்டியல் இன பழங்குடியின மக்களுக்காக மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் ஊனான்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் திரு. சந்திரன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.ஒன்றிய கவுன்சிலர் திருமதி.சித்ரா சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
NIEPMD SC/ST FLAGSHIP திட்ட NODEL OFFICER Dr.தனவேந்தன் அவர்கள் NIEPMD திட்ட செயல்பாடுகள் மற்றும் அரசு நல திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
திருமதி.கலாசமயன்.பேராசிரியர்.SRMMCH&RI,
SRMIST, Chennai பேச்சு , காதுகேளாதோர் குறைபாடுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து உரையாற்ற்னார்.பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து வழக்கறிஞர் திரு.முருகேசன் அவர்கள் கூறினார்.அரசு திட்டம் மற்றும் அணுகுமுறைகள் குறித்து திரு.ஜெயவேல் சமூக பணியாளர் எடுத்துக்கூறினார்.நன்றியுரை திருமதி.சியாமளா.MRDS செயலாளர் கூற நிகழ்வு முடிவுற்றது.இதில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடியின மாற்று திறனாளிகள்மற்றும் அவர்களின் பெற்றோர், மாணவர்கள், மகளிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *