டாடா நிறுவனத்தின் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – நவம்பர்-15-ல் ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நவம்பர்.15-ல் நடைபெறுகிறது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ முடித்த மாணவியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நவம்மர்.15-ல் நடைபெறுகிறது. ராசிபுரம் ரோட்டரி கிளப், வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட், டாடா குழுமம் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாமினை நடத்துகிறது. 18 வயது முதல் 20 வயதுடைய 12-ம் வகுப்பு முடித்தவர்கள், 18 வயது முதல் 21 வயது முடித்தவர்களும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். டாடா நிறுவனத்தின் அலுவலர்கள் இதற்கான நேர்காணல் நடத்துவர். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒரு மாத பயிற்சிக்கு பின், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணியமர்த்தப்படுவர். சம்பளம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும். தொடர்புக்கு:
📱9361463664
📱7540063437
📱9751384876

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *