கனமழை மற்றும் பேரிடர் காலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி….
விடுமுறையினை முதல்நாள் இரவே அறிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெண்டுகோள். மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
மாணவர்களின் நலன் பாநுகாப்பு கருதி மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் விடுமுறை அறிவிப்பு குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முடிவெடுத்துக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.
பேரிடர் காலங்களில் வவிடுமுறை
வழங்கப்படும்போது வானிலை மையத்தின் அறிவிப்பையும் கணிப்பையும் வெளியிடும்போது அதற்கேற்றார்போல் முதல்நாள் இரவு அல்லது மறுநாள்காலை 6.30 மணிக்குள் விடுமுறை வழங்க ஆட்சித்தலைவர்கள் ஆவனசெய்யும்படி வேண்டுகின்றோம். வானிலை மையம் கணிப்பைமீறி இயற்கையின் சீற்றம் சில நேரங்களில் மாறுபட்ட நிலையை ஏற்படுத்துவது தவிர்க்கஇயலாது.மேலும் நகர்புறம் நீங்கலாக கிராமப்புற மாணவர்கள் நீண்டதூரம் பயணிப்பதால் காலையில் சீக்கிரமாக பள்ளிக்கு புறப்பட்டு சென்றுவிடுவதால்
. விடுமுறை அறிவிப்பை சில மாவட்டங்களில் 8 மணிக்கு மேல் அறிவித்து மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மழையில் நனைந்து கொண்டு பள்ளிக்கு வருகைதந்தபிறகு விடுமுறையென்று தெரிந்து மீண்டும் வீடு திரும்ப கூடிய சூழ்நிலையால் பல்வேறு பாதிப்புகளும் இதனால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.எனவே
இதனை கவனத்தில் கொண்டு
காலை 6.30 மணிக்குள் அறிவிப்பதன் மூலம் மாணவர்களிடையே ஏற்படும் பதட்டத்தை தடுக்க முடியும் …
ஆகவே சம்பந்தப்பட்ட மாவட்ட. நிர்வாகம் கவனத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்….
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு . ஆசிரியர் சங்கம்.
98845 86716

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *