பெண்களுக்கான திருமண வயது 21 என்ற புதிய சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தல் அந்த காலங்களில் பெண்கள் வயதுக்கு வருவது 16 வயதிற்கு மேல் வருவார்கள், ஆனால், தற்பொழுது மரபணு மாற்றப்பட்ட விதையினாலும், பிராயிலர் கோழியினாலும் இளம் பெண்கள் 10, 12 வயதுகளிலேயே பூப்படைந்து விடுகின்றனர். அவ்வாறு இருக்கும் நிலையில் பெற்றோர் தம் இளம்பெண்களை 18 வயதுவரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு பாதுகாப்பாக வைத்திருப்பது கடுமையான நிலையில் உள்ளது. அவ்வாறு குறைந்த வயதில் பெண்களை திருமணம் செய்தால், திருமண பெண்களை காப்பகம் என்னும் சிறையில் அடைத்தும், திருமண ஆண்களையும், அவர்களின் பெற்றோர்களையும், உற்றார் உறவினர்களையும் காவல் நிலையங்களில் வழக்கு பதிந்து சிறையில் அடைக்கும் அவல நிலை ஏற்படும். எனவே, இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க புதிதாக கொண்டுவந்துள்ள பெண்கள் திருமண சட்டம் 21 வயது என்பதை 18 வயதாக மாற்றகோரி *தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு* BABL அவர்களின் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் 20.12.2021ந்தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுத்தல் நடைபெற உள்ளது. ஆகவே, அனைத்து பத்திரிகை & ஊடக அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு செய்தி சேகரித்து வெளியிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏🙏🙏 இப்படிக்கு,

S. பிரேம்குமார் – செய்திதொடர்பாளர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *